இளையராஜாவுக்கு சேர் வாங்ககூட காசு கிடையாதா? லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை

Ilayaraaja
By Nandhini 1 மாதம் முன்

லட்சுமி ராமகிருஷ்ணன் 

லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை மட்டுமல்ல, சினிமாவில் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் ‘ஆரோகணம்’, ‘நெருங்கிவா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில் இவர் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக விருமாண்ட பட ஹீரோயின் அபிராமி நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Lakshmy Ramakrishnan

இளையராஜா புகைப்படம் வைரல் 

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசைப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை சந்தித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்போது அங்கு எடுத்த புகைப்படத்தை தன் டுவிட்டரில் வெளியிட்டார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்தப் புகைப்படத்தில் இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார்.

சேர் வாங்க கூட காசில்லையா?

இதைப் பார்த்த சில நெட்டிசன்கள், ஏன் இளையராஜாவுக்கு சேர் வாங்க கூட காசில்லையா?, மற்றொருவருக்கு சேர் கொடுத்தா என்ன கொறஞ்சி போயிடுவாரா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதன் இளையராஜா? என்று கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்துள்ளனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்

இதைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நெட்டிசன்கள் பதில் கொடுத்துள்ளார். இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை நான் பாக்யமாக நினைக்கிறேன். தரையில் அமர்வது உடலுக்கு ரொம்ப நல்லது. அதனை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.