நெற்றியில் முத்தம்; திருமணம் செய்த மாணவர் - கதறும் ஆசிரியை..
பேராசிரியை மாணவர் திருமணம் செய்ததாக வீடியோ ஒன்று பரவியது.
ஆசிரியை திருமணம்
மேற்கு வங்கம், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில், பேராசிரியை முதலாமாண்டு மாணவரைத் திருமணம் செய்வதுபோல வீடியோ ஒன்று படு வைரலானது.

அதில், பேராசிரியை மணக்கோலத்தில், மாணவருடன் ஒருவரையொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். மாணவரும் பேராசியைக்கு நெற்றியில் மூன்று முறை திலகமிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் பேராசிரியையை விடுப்பில் அனுப்பியுள்ளது.
வெடித்த சர்ச்சை
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பேராசிரியை, ``இது இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஃபிரஷர்ஸ் பார்ட்டிக்காக நாங்கள் செய்த நாடகம். எனக்கெதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இது வேண்டுமென்றே வைரலாக்கப்பட்டிருக்கிறது. என்னை அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது நான் போலீஸில் புகாரளிப்பேன்." என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி, ``இதில் எந்தவொரு ஒழுக்கக்கேடான நடத்தையும் இல்லை என்று பேராசிரியை கூறியிருக்கிறார். இருப்பினும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருப்பதால், குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையில் விடுப்பில் செல்லுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டோம்." என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதை அவர் நியாயப்படுத்த முடியாது என்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil