20 வயது மாணவனுடன் 35 வயது பேராசிரியை தகாத உறவு; 2 முறை கர்ப்பம் - விளாசிய நீதிபதி!
பேராசிரியை, மாணவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்துள்ளார்.
மாணவனுடன் உல்லாசம்
ஹரியானா, குர்கானில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்ப்பவர் 35 வயது பெண். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த வருடம் பிப்ரவரி மாதம்தான், காலேஜில் முதன்முதலில் மாணவரை சந்தித்தேன்.
அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த வருடம் மே மாதம், நாங்கள் 2 பேருமே மணாலிக்கு சென்றோம்.. அங்கிருக்கும் ஒரு கோயிலில், என்னை அந்த மாணவர் கல்யாணம் செய்துகொண்டார். இருந்தாலும், சட்டப்பூர்வமாக கல்யாணம் செய்துகொள்வதாகவும் சத்தியம் செய்தார்.
2 முறை கர்ப்பம்
கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில், நான் 2 முறை கர்ப்பமானேன். இதை பற்றி மாணவரிடம் நான் சொன்னதுமே, அவர் என்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே நான், அம்மாணவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகார் சொன்னேன். அதற்கு அவர்கள், அபார்ஷன் செய்யுமாறு என்னை கட்டாயப்படுத்தினார்கள்.
எனவே, ஏமாற்றிய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, இதில் முன் ஜாமீன் கேட்டு மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, பேராசிரியருக்கு 35 வயதாகிறது.. பி.ஹெச்டி முடித்திருக்கிறார் என்பதால், நிச்சயம் உயர்கல்வி அறிவை கொண்டவராகத்தான் இருப்பார்.
நீதிபதி தீர்ப்பு
இவர்கள் 2 பேருக்கும் இடையிலானது குரு - சிஷ்யன் உறவு முறை. 0 வயது மாணவனுடன் நெருங்கி பழகும் நேரத்தில், தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதையோ, மாணவனைவிட, தனக்கு வயது அதிகம் என்பதையோ பேராசிரியை நிச்சயம் மறந்திருக்க முடியாது.
மாணவனுடன் பேராசிரியர் உடலுறவில் ஈடுபட்டதுடன், கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அதை தொடந்திருக்கிறார். தாமாகவே முன்வந்து உறவிலும் இருந்திருக்கிறார். அதனால் விளைவுகள் குறித்தும் பேராசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்" எனக் கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.