12 வயது சிறுவனுடன் 34 வயது ஆசிரியை உல்லாசம் - 2 குழந்தைகள் வேறு..!
12 வயது சிறுவனை, 34 வயது ஆசிரியர் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
மாணவனுடன் திருமணம்
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவைச் சேர்ந்தவர் விஜி ஃபுலாவ். இவர் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துள்ளார். அங்கு பணியாற்றிய மேரி(34) என்ற ஆசிரியருக்கு இவர் மீது ஈர்ப்பு வந்துள்ளது.
அதனால், விஜியுடன் அந்த ஆசிரியை உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்த தகவல் வெளிவந்ததில் மேரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 குழந்தைகள்
அதன்பின் வெளியில் வந்த பின்னும் சிறுவனுடன் உறவைத் தொடர்ந்துள்ளார். மேலும், உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். தொடர்ந்து, 2005ல் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
14 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்த நிலையில், விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன்பின்னும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், 2020ல் புற்றுநோயால் மேரி உயிரிழந்தார். இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில்,
மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது நான் தான், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாகத் தெரிவித்துள்ளார்.