திருமணம் என்றால் என்ன? மாணவன் அளித்த பதிலால் டென்சன் ஆன டீச்சர் - வைரலாகும் பதிவு
திருமணம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மாணவன் அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை சோதிப்பதற்காகவும், சமூகம் சார்ந்த பல அறிவு சார்ந்த தலைப்புகளில் பள்ளிகளில் கட்டுரை தலைப்பு கொடுக்கப்பட்டு மாணவர்கள் சோதிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் ஆசிரியர் கொடுத்த கட்டுரை தலைப்புக்கு மாணவர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றால் என்ன?
திருமணம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மாணவன் அளித்த பதிலில், திருமணம் என்ன என்றால் ஒரு பெண்ணின் பெற்றோர் இப்போது நீ பெரிய பெண்ணாக ஆகிவிட்டாய்.
அதனால் எங்களால் உனக்கு உணவு அளிக்க இயலாது. உனக்கு உணவளிக்கும் சிறந்த ஆணை நீ கண்டுப்பிடி. அதன்பின் அந்த பெண் ஒரு ஆணை கண்டுபிடிக்கிறாள்.
ஆணின் பெற்றோர் அவனிடம் நீ பெரிய பையனாக ஆகிவிட்டாய் அதனால் நீ திரும்ணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.
ட்வீட்டர் பதிவு வைரல்
அதன்பின் இருவரும் தங்களை சோதித்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பிறகு ஒன்றாக வாழ சம்மதித்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முட்டாள்தனமான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார்.
மாணவன் எழுதிய கட்டுரையை திருத்திய ஆசிரியர் 10 மதிப்பெண்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை வழங்கி முட்டாள் என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுரையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மாணவனின் இந்த பதிலை மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். மேலும் இந்த செய்தி குறித்தான மீம்ஸ்களும் படுவேகமாக வைரலாகி வருகிறது.