கடும்பனியில் போராடும் ஆயிரக்கணக்கான மக்கள்; கடைகள் மூடல், பாஜகவிற்கு எதிர்ப்பு - என்ன காரணம்?
ஆயிரக்கணக்கான மக்கள் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனி மாநில அந்தஸ்து
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி லே, கார்கில் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. கார்கில் மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.
இதுகுறித்து லடாக் போராட்ட குழுவினர் கூறுகையில், எங்களுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மாநிலத்துக்கு சட்டசபையை உருவாக்க வேண்டும். லடாக் தனி மாநிலத்தை பழங்குடிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அரசியல் சாசனத்தின் 6-வது பிரிவில் இணைக்க வேண்டும்.
போராட்டம்
அத்துடன் லே, கார்கில் ஆகிய மாவட்டங்களை 2 லோக்சபா தொகுதிகளாகவும் அறிவித்து லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியே முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் லே சலோ என முழக்கமிட்டனர். உறைபனியிலும் வயது வித்தியாசமின்றி உரிமை குரல் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
