மீண்டும் வெடித்த கலவரம் - மாநிலம் முழுவதும் ஊரடங்கு!
மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கலவரம்
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால்
அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இதனை கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஊரடங்கு
இதில், சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான பொருட்கள் தீக்கிரையாயின. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இம்பால் அருகே உள்ள லாம்புலனஸ் நகரில் மீண்டும் கலவரக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, தற்றத்தை தணிக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.