தூங்காமல் இருந்தால் கருவுறுதலில் சிக்கலா? இனப்பெருக்க ஹார்மோன் பிரச்சனை வேறு!
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
தூக்கமின்மை
மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டும் பெரும்பாலும் தூக்கத்தை அடிப்படையாக கொண்டே அமைகிறது. இது சாத்தியமில்லாத போது மன அழுத்தம் மனச் சிதைவு மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண்கள் விசயத்தில் கருவுறுதலையும் பாதிக்கலாம். னப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அண்டவிடுப்பின் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், மோசமான விந்தணுக்களின் தரம், ஆண்களின் விந்தணு வடிவம் இவை அனைத்தும் இதனுடன் தொடர்புடையவை தான்.
பாதிப்புகள்
ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவையும் சீர்குலைக்கும். குறைந்தது 8 மணிநேரம் தூக்கம் அவசியம். உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறைந்தது 6-7 மணிநேரம் தூங்க வேண்டும்.
ஆனால் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது கருவுறுதல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளையும் பாதிக்கலாம். உடற்பயிற்சி உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
ஃபோன் திரையைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். தூங்கும் முன் காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளாதீர்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மற்றும் தியானம் செய்வதும் நன்றாக தூங்க உதவும்.