தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க, தூக்கம் நன்றாக கிடைக்க இந்த பழத்தை நன்றாக சாப்பிடுங்க!
சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். தினந்தோறும் இரண்டு சப்போட்டா பழங்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும். ஆரம்பநிலை காசநோய் குணமடைய காச நோயினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில் குணமடையும்.
சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது.
சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது.
இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது. சப்போட்டா பழத்திலுள்ள சில சத்திப் பொருட்களும், வைட்டமின்களும் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். இருமல் தொல்லையிலிருந்தும் விடுபட சப்போட்டா பழத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும்.
நாளடைவில் இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். கண்களுக்கு சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
மலச்சிக்கல் சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து (5.6/100g) அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. தூக்கமின்மை சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
காய்ச்சல் சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும். கொலஸ்டிரால் கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
உடல் உஷ்ணம்
உடல் உஷ்னத்தை சரி செய்ய சப்போட்டா பழத்தை பாலுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் போதும் உடல் உஷ்ணம் நீங்கும்.