மகளிருக்கான இலவச பேருந்து; கடுமையாக விமர்சித்த எல்&டி நிறுவன இயக்குநர் - ஏன் தெரியுமா?
மகளிருக்கான இலவச பேருந்து சேவையை எல்&டி நிறுவன இயக்குனர் ஷங்கர் ராமன் விமர்சித்துள்ளார்.
இலவச பேருந்து
டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எல்&டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷங்கர் ராமன், போக்குவரத்து அமைப்பில் பாலின பாகுபாடு நிலவுகிறது. பேருந்துகளை பெண்கள் எந்த கட்டணமும் இன்றி பயன்படுத்துகிறார்கள்.
L&T இயக்குநர் விமர்சனம்
அதேவேளையில், மெட்ரோ ரயில்களை ஆண்கள் சராசரியாக ஒரு டிக்கெட்டிற்கு ரூ.35 செலவு செய்து பயன்படுத்துகிறார்கள். பெண்கள் ரயில்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. பஸ்களின் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். அதேவேளையில், பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
பஸ்களில் பயணம் செய்த ஆண்கள் ரயில்களுக்கு வருகிறார்கள். வாக்குறுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மாநிலத்தின் நிதிநிலைக்கு உதவுவது இல்லை.
இந்த விவகாரத்தில் எந்த வேடிக்கையும் இருக்க கூடாது.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை 2026 க்கு பிறகு விற்பனை செய்ய எல்&டி திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.