மகளிர் இலவச பேருந்துகளுக்கு எதிர்ப்பு.. திடீர் பந்த் அறிவிப்பு - மக்கள் அவதி!

Karnataka
By Vinothini Sep 11, 2023 05:30 AM GMT
Report

இன்று வார முதல் நாளில் திடீர் பந்த் அறிவிப்பால் மக்கள் அவதியில் உள்ளனர்.

இலவச பேருந்து

தமிழ்நாட்டில் இலவச பேருந்து உள்ளது போல், கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு இலவச பேருந்து தொடங்கப்பட்டுள்ளது. சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

bandh-in-bangalore-on-opposing-free-bus

இந்த திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டது.

திடீர் பந்த்

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று வாரத்தில் முதல் நாளில் பந்த் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

bandh-in-bangalore-on-opposing-free-bus

இது இன்று நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெற உள்ளது. இதற்கு தனியார் பேருந்து சங்கங்கள், ஆட்டோ உள்ளிட்ட 32 சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கூடுதலாக 500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக கர்நாடகா போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.