பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் - பிச்சை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன போராட்டம்!
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச பயணம்
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
[C4MLT8[
தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ரேவந்த் ரெட்டி முதலமைச்சரான நிலையில், முதற்கட்டமாக அத்திட்டத்தை நிறைவேற்றினார்.
நூதன போராட்டம்
இதன் மூலம் சொகுசு பேருந்துகள் தவிர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்தில் பெண்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.