இப்படி ஒரு நிலைமையா? பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை - கேலிக்கு ஆளான குஷ்பு!

BJP India Andhra Pradesh Kushboo Election
By Jiyath May 01, 2024 09:37 AM GMT
Report

பிரச்சாரத்தின்போது 50 பேர் கூட இல்லாமல் போனதால் நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் கேலிக்கு ஆளாகியுள்ளார்.  

குஷ்பு பிரச்சாரம்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உடல் நலக்குறைவு காரணமாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகினார்.  தற்போது அவர் ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாார்.

இப்படி ஒரு நிலைமையா? பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை - கேலிக்கு ஆளான குஷ்பு! | Kushboo Election Campaign In Andhra Pradesh

ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் குஷ்பு ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும் - ராகுல் காந்தி!

கேலி, கிண்டல்

அந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50 பேர் கூட இல்லை. இதனால் குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பிய படி வாகனத்தில் சென்றார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இப்படி ஒரு நிலைமையா? பிரசாரத்தில் 50 பேர் கூட இல்லை - கேலிக்கு ஆளான குஷ்பு! | Kushboo Election Campaign In Andhra Pradesh

இந்த வீடியோவை பார்த்தவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவிற்கு இந்த நிலைமையா? தீவிர பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் 50 பேர் கூட இல்லையே என கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.