டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு!

Udhayanidhi Stalin Tamil nadu Kanchipuram DMK Lok Sabha Election 2024
By Jiyath Mar 31, 2024 08:00 AM GMT
Report

கோரிக்கை விடுத்த பொதுமக்களிடமே உதயநிதி ஸ்டாலின் திருப்பி கேள்வி எழுப்பியதால் பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மதுராந்தகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு! | Voters Questions On Tasmac To Udayanidhi Stalin

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் "2016-ல் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு தேர்ந்தெடுங்கள் அனைத்து ஒயின்ஷாப்பையும் மூடிவிடுகிறேன் என்று கூறினார். நீங்கள் ஒட்டு போட்டீர்களா..?.

பிரச்சாரத்தில் பரபரப்பு

2016-ல் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஒயின்ஷாப்ப்புகள், டாஸ்மாக்குகளை மூடிவிடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஞாபகம் இருக்கிறதா..? ஒட்டு போட்டீர்களா..?

டாஸ்மாக்கை மூட கோரிய பெண்கள்; உதயநிதி திருப்பி கேட்ட கேள்வி - பிரச்சாரத்தில் பரபரப்பு! | Voters Questions On Tasmac To Udayanidhi Stalin

யாருக்கு ஓட்டு போட்டீர்கள்.. அதிமுகவுக்கு தானே ஒட்டு போட்டீர்கள்" என்று பொதுமக்களை பார்த்து சிரித்தபடியே கேள்வி எழுப்பினார். கோரிக்கை விடுத்த பொதுமக்களிடமே உதயநிதி ஸ்டாலின் திருப்பி கேள்வி எழுப்பியதால் பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.