வயநாடு தேர்தல்.. பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்பு போட்டி? வெளியான தகவல்!
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு
2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பின் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.மேலும் இவரை எதிர்த்து வயநாடு தொகுதியில் குஷ்புவைக் களமிறக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல்
இதனை தொடர்ந்து வயநாடு தொகுதிக்கான பாஜக-வின் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக குஷ்பு கூறியதாவது: தேர்தல் என்று வந்தாலே இதுபோன்ற வதந்திகள் பரவுகிறது.
எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழுகின்றன. இப்போதும் அதுபோல வதந்தி எழுகிறது எனக் கூறியுள்ளார். மேலிடம் என்ன பதவிகள் கொடுத்தாலும் அதனைச் சிறப்பாக நூறு சதவீதம் செய்து முடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.