நீதி வெல்லும்! ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Rahul Gandhi Government of Tamil Nadu
By Thahir Aug 04, 2023 09:17 AM GMT
Report

மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கின் மேல்முறையீடு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

2019-ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் போது, ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என்ற வழக்கில் குஜராத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மட்டுமின்றி அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

Wayanad retains RahulGandhi M K Stalin Tweet

தற்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி வெல்லும் - முதலமைச்சர் 

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதி வெல்லும்! ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது!,

Wayanad retains RahulGandhi M K Stalin Tweet

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கிறோம். ராகுல் காந்தி குற்றவியல் அவதூறு வழக்கில். இந்த முடிவு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. என்று அவர் பதிவிட்டுள்ளார்.