வயநாட்டில் தோல்வி பயமா? 2 தொகுதியில் ராகுல் போட்டியிடுவது ஏன்?
இன்று காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பின் படி, மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநில ரேபரேலியில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
நடந்து முடிந்த 2-ஆம் கட்ட தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் சேர்த்து வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பெரும் முக்கியத்துவம் பெறுவது வயநாடு தொகுதி தான்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக கேரளா மாநில தலைவர் சுரேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அன்னி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். 2019-ஆம் ஆண்டு இந்த தொகுதியில் இருந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானாலும் அவர் இம்முறை இங்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
எதிர்த்து போட்டியிடும் இருதலைவர்களும் பலமானவர்களே. அது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக அமையவும் வாய்ப்புள்ளது. அதன் முன்னெச்சரிக்கையாக தான் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் களமிறங்கியுள்ளார் என்றே கருதுபடுகிறது.
ரேபரேலி
உத்திரபிரதேசத்தில் மிகவும் பலமாக இருக்கின்றது மத்திய பாஜக கட்சி. எதிர்த்து களம் காணும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக்கு இம்முறை நிறைய இடங்கள் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
ரேபரேலி தொகுதியில் இருந்து பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, சோனியா காந்தி என பலர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
அதே நேரத்தில், கடந்த முறை அவர் போட்டியிட்டு தோல்வியடைந்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.