மளமளவென ஏறிய மல்லிகை விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Festival
By Vinothini Nov 26, 2023 10:57 AM GMT
Report

மல்லிகை பூவின் விலை அதிகரித்துள்ளது.

பூ விற்பனை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

jasmine flower

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உரிமை தொகையில் மாற்றம்.. வங்கி கணக்கில் ரூ.1000 அல்ல ரூ.4000 வரும் - புதிய தகவல்!

உரிமை தொகையில் மாற்றம்.. வங்கி கணக்கில் ரூ.1000 அல்ல ரூ.4000 வரும் - புதிய தகவல்!

விலை உயர்வு

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா, கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும்,

jasmine flower

முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.