உரிமை தொகையில் மாற்றம்.. வங்கி கணக்கில் ரூ.1000 அல்ல ரூ.4000 வரும் - புதிய தகவல்!

M K Stalin Tamil nadu
By Vinothini Nov 25, 2023 01:30 PM GMT
Report

மகளிர் உரிமை தொகையில் ரூ. 4000 வங்கி கணக்கில் வரும் என்று தெரிவித்துள்ளனர்.

உரிமை தொகை

தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

மகளிர் உரிமை தொகை

இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மாதம் தீபாவளியையொட்டி முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்த ரூ.1000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

புதிய தகவல்

இந்நிலையில், மேல் முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தற்போது மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

மகளிர் உரிமை தொகை

தற்பொழுது மேல் முறையீடு செய்தவர்கள் பயனர்களாக இணைக்கப்படும் போது அவர்களுக்கு நான்கு மாத காலத்திற்கான தொகை ரூ. 4000 வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Like This Video