எகிறிய மல்லிகை பூவின் விலை - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிடுகிடு உயர்வு!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழ் புத்தாண்டு
புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் சந்தையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு,
ஒரு கிலோ மல்லிகைப் பூ 1,300 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை
அதன்படி ஒரு கிலோ பிச்சிப்பூ 2,000, மல்லிகை 1,200 ரூபாய்க்கும், ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.
தொடர்ந்து, இதேபோன்று விலை கிடைத்தால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.