மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி; நம்பமுடிகிறதா? கண்டிப்பா ட்ரை செஞ்சு பாருங்க..
ஆட்டுக்கறி போன்ற சுவை உள்ள காய்கறி ஒன்று மிகப் பிரபலமானதாக உள்ளது.
கும்ஹர்
மேற்குவங்கத்தில் மிக பிரபலமாக காய்கறிகளில் ஒன்றாக அறியப்படுவது கும்ஹர் (Kumhar). பேத்தா என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனை மிதிலா பகுதி மக்கள் விரும்பி உண்கின்றனர்.
ஏனெனில், இந்த காய்கறியை சைவ ஆட்டிறைச்சி என்று அழைக்கின்றனர். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் இதனை பச்சையாக இருக்கும் போதே சிறுசிறு பீஸ்களாக வெட்டி உலர வைத்து விடுகின்றனர்.
ஆட்டிறைச்சி சுவை
பின் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி கொள்கிறார்கள். இது ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இந்த ட்ரை பேத்தாவை எவ்வாறு தயாரிப்பது என்று கற்று கொடுக்கிறார்கள்.
தமிழில் வெண்பூசணியின் ஒரு ரகமாகவே இந்த காய்கறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.