திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் டாக்டர் கிருஷ்ணசாமி!
டாக்டர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டாக்டர் கிருஷ்ணசாமி
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளம் காரணமாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அதனையொட்டி, அக்கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு உதவிகளை செய்து வந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
உடல்நலக் குறைவு
இந்நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அதிக காய்ச்சல் இருப்பதாகவும், மேலும் கொரானா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து, சிகிச்சையில் இருந்த அவர் உடல் நிலை தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின், கோவை புறப்பட்டுச் சென்றார்.