நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..!
நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சினை காரணமாக மெட்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னணி கதாபாத்திரம்
1980களில் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகர் பிரபு தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்திலும் நடிகர் பிரபு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 20ம் தேதி) சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சினை காரணமாக நேற்று மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு நேற்று (பிப்.21ம் தேதி) காலை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.
அறுவை சிகிக்சைக்கு பிந்தைய-பொதுவான மருத்துவ சோதனைகளுக்கு பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.