விஜய்யே அழைத்தாலும் நோ தான்; ஆனால் கல்யாணத்திற்கு பின்.. KPY பாலா வெளிப்படை

Vijay KPY Bala
By Sumathi Jun 16, 2024 02:30 PM GMT
Report

அரசியலில் இறங்கமாட்டேன் என கேபிஒய் பாலா தெரிவித்துள்ளார்.

KPY பாலா

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளியில் காமெடியில் கோமாளியாக அசத்தினார்.

விஜய்யே அழைத்தாலும் நோ தான்; ஆனால் கல்யாணத்திற்கு பின்.. KPY பாலா வெளிப்படை | Kpy Bala About Politics And Marriage

தற்போது, இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, பட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும், தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறார்.

மனைவியா இப்படி பொண்ணு தான் வேணும் - KPY பாலா போட்ட கண்டிஷன்!

மனைவியா இப்படி பொண்ணு தான் வேணும் - KPY பாலா போட்ட கண்டிஷன்!

அரசியல் வருகை?

இந்நிலையில், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடியில் நடந்த கண்காட்சியை திறந்துவைத்து கலந்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் நான் அரசியலில் இறங்க மாட்டேன்.

kpy bala

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அழைத்தாலும் நிச்சயம் அரசியலில் இறங்க மாட்டேன். நான் தற்போது கூடுதலாக உழைத்து வருகிறேன்.

அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே பிறருக்கு உதவி செய்து வருகிறேன். மேலும் எனது திருமணத்திற்கு பிறகும் மக்களுக்கு உதவி பணி தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.