மனைவியா இப்படி பொண்ணு தான் வேணும் - KPY பாலா போட்ட கண்டிஷன்!
தனது வருங்கால மனைவி குறித்த பாலாவின் கண்டிஷன் வைரலாகி வருகிறது.
KPY பாலா
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளியில் காமெடியில் கோமாளியாக அசத்தினார்.
தற்போது, இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, பட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
வருங்கால மனைவி
நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும், தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்களின் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் எனறு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பாலா, எனக்கு மனைவியாக வர போகும் பெண் எனக்கு காலையிலிருந்து காபி டீ போட்டு தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை நம்பினால் போதும், அவர்களுக்கு தேவையானதை நான் செய்ய ஆரம்பித்து விடுவேன்.
அதே போல, எனக்கு டிரஸ்ட்டை கொடுத்தால், அவர்களுக்கு நான் ரெஸ்ட்டை கொடுப்பேன் என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.