விரைவில் காதல் திருமணம் ...உறுதியான தேதி KPY பாலாவிற்கு திருமணம்
தமிழகத்தில் தற்போது பெரும் பிரபலமாக இருக்கின்றார் KPY பாலா.
KPY பாலா
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பலரும் சிறிது காலத்தில் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு மறைந்து விடுவார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து திறமைகளை வளர்ந்து மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்று விடுவார்கள்.

அப்படி தமிழ் திரைரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நபராக இருக்கின்றார் KPY பாலா. KPY நிகழ்ச்சியை தொடர்ந்து அவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்ப்பை பெற்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
திருமணம்
திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார் KPY பாலா. நடிகர் என்பதை தாண்டி, இவர் ஆற்றி வரும் சமூகநல பணிகள் இவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்துள்ளது. ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மழை - வெள்ள பாதிப்பின் போது நிவாரணங்களை அளித்தது, தண்ணீர் வசதி செய்து கொடுத்தது என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ளார் KPY பாலா.

கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட KPY பாலாவிடம் இது குறித்து வினவப்பட்ட போது, அதற்கு பதிலளித்த அவர் அடுத்த மாதம் தனக்கு காதல் திருமணம் நடைபெற உள்ளதாக கூற காதலி யார் என்று மாணவிகள் கேள்ளி கேட்டனர். அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் சிரிப்பையே தனது பதிலாக அளித்தார்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan