பிடித்த நடிகையை பாடாய் படுத்திய பாலா - எட்டி உதைத்த பிரபல நடிகர்!
இயக்குநர் பாலா பேசியிருக்கும் விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பாலா
சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இவருக்கு உண்டு.

அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ள பாலா,
சுவாரஸ்ய தகவல்
"நான் கொஞ்ச ஹீரோயின்ஸ்கூடவே ஒர்க் பண்ணிருக்கேன். அந்தவகையில் சொல்கிறேன் எனக்கு பிடித்த நடிகை என்றால் வரலட்சுமிதான். ஏனென்றால் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியின் தோள்பட்டையில் ஓங்கி மிதிக்க வேண்டும். ஷாட் கொஞ்சம் சரியாக வர வேண்டும் என கத்தியதால் அவர் உண்மையிலேயே முதல் டேக்கிலேயே மிதித்துவிட்டார்.

அது எனக்கு தெரியாது. இப்படி 2,3 டேக்குகள் போய்விட்டோம். பிறகுதான் நான் ஓகே சொன்னேன். ஆனால் முதல் டேக்கிலேயே வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு க்ராக் ஆகியிருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் சொல்லவே இல்லை. பிறகு ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஷூட்டிங் வந்த அவர், க்ராக் ஆன எலும்பின் எக்ஸ்ரேவை காண்பித்தார்.
நான் உடனே என்னம்மா இது சிஜியா என்று கேட்டேன். அவர் உடனே வாடிய முகத்தோடு இல்லை சார் உண்மையிலேயே உடைந்துவிட்டது. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் என சொன்னார். அந்த அளவுக்கு வரலட்சுமி கடின உழைப்பாளி. அதனால்தான் அவரை பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan