அந்த விஷயத்தில் இயக்குநர் பாலாவிற்கு விருப்பமே இல்லையாம் - விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்

Divorce விவாகரத்து காரணம் Director-Bala Muthumalar இயக்குநர் பாலா முத்துமலர்
By Nandhini Mar 11, 2022 06:10 AM GMT
Report

 ‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் பாலா.

இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு. சினிமாத்துறையுலகில் கடந்த சில மாதங்களாக முக்கிய பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகிறார்கள்.

இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது.

கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள், கடந்த 5ம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும், முத்துமலரும் 17 வருட வாழ்க்கையிலிருந்து பிரிந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அந்த விஷயத்தில் இயக்குநர் பாலாவிற்கு விருப்பமே இல்லையாம் - விவாகரத்திற்கு இதுதான் காரணமாம் | Director Bala Muthumalar Divorce

இயக்குநர் பாலா விவாகரத்து குறித்து சமூகவலைத்தளங்களில் பல தகவல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பாலா குறித்து ஒரு விஷயம் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பாலாவிற்கு திருமண வாழ்க்கையில் நாட்டமே கிடையாதாம். பெற்றோர்கள் வற்புறுத்தலின் பேரில்தான் அவர் திருமணமே செய்துக்கொண்டாராம்.

இல்லற வாழ்க்கையை விட பாலாவிற்கு சினிமா வாழ்க்கைக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பாராம். திருமணம் ஆன பிறகும், சினிமாவே கதி என்று இருந்து வந்துள்ளார் இயக்குநர் பாலா.

இதனால், மனைவிக்கும், இவருக்கும் இடையே பலப் பிரச்சனைகள் உருவாகியிருக்கிறதாம். இவர்களது விவாகரத்திற்கு இதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.