திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தூக்கிட்டு தற்கொலை..! கோவையில் அதிர்ச்சி
கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆர். கிருஷ்ணன்
கோவை மேற்கு மாவட்ட பகுதியின் மிகவும் செல்வாக்கு மிக்க திமுக நிர்வாகியாக இருந்தவர் ஆர்.கிருஷ்ணன் (எ) பையா கவுண்டர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஆர்.கிருஷ்ணன், அந்த தேர்தலில் அதிமுகவின் அருண்குமார் என்பவரிடம் தோல்வியுற்றார் ஆர்.கிருஷ்ணன்.
அதனை தொடர்ந்து, கட்சி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆர்.கிருஷ்ணன், கட்சி பணிகளில் இருந்தும் சிறிது விலகியே இருந்துள்ளார்.
தற்கொலை...
நேற்று இரவு காளப்பட்டி பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்.கிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த அவருக்கு வயது 65. அவரது தற்கொலை குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.