பாலியல் வன்கொடுமை: பெண் பயிற்சி மருத்துவர் கொலை - காவல்துறைக்கு மம்தா வைத்த கெடு !

India Crime Mamata Banerjee Doctors
By Vidhya Senthil Aug 13, 2024 04:26 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறையினருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா ஒருவார காலம், கெடு விதித்துள்ளார்.

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ,மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கத்தில் அதே மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்ற பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.அவரின் உடலில் கை ,கால் ,முகம் என அனைத்து பகுதிகளிலும் காயங்கள் இருந்தது.

பாலியல் வன்கொடுமை: பெண் பயிற்சி மருத்துவர் கொலை - காவல்துறைக்கு மம்தா வைத்த கெடு ! | Kolkata Govt Hospital Woman Doctor Murdered

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேற்கு வங்க காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழகம் வரும் மம்தா பானர்ஜி .. காரணம் என்ன ?

தமிழகம் வரும் மம்தா பானர்ஜி .. காரணம் என்ன ?

பிரேத பரிசோதனை

முதற்கட்டமாக ,பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ,படுகொலை செய்யப்பட்டுதான் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

பாலியல் வன்கொடுமை: பெண் பயிற்சி மருத்துவர் கொலை - காவல்துறைக்கு மம்தா வைத்த கெடு ! | Kolkata Govt Hospital Woman Doctor Murdered

அக்கல்லூரியில் பயின்று வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி நாடு முதுவதும் உள்ள மருத்துவர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில்,பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யமாநில காவல் துறையினருக்கு வரும் ஞாயிற்று கிழமை வரை நேரம் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அப்படி இல்லையென்றால் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார்.