இப்படி ஒரு அரியவகை நோயா? மம்தா மோகன்தாஸ் கையை பாத்தீங்களா!
மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், தமிழில் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மம்தா மோகன்தாஸ்
தமிழில் ஒருசில குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ். விஷாலுடன் "சிவப்பதிகாரம்" படத்தில் அறிமுகமாகியவர், அடுத்து குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி, மகாராஜா போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால், இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் விருது, பிலிம் பேர் விருதுகளையும் மலையாளத்தில் வென்றுள்ள மம்தா மோகன்தாஸ்.
இவர் மம்தா மோகன்தாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பின்னணி பாடகராகவும் இருந்து வரும் இவர், தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
அறிய நோய்
2011-ஆம் ஆண்டு ப்ரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அத்திருமணம் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. விவாகரத்திற்கு பிறகு தற்போது திரை துறையில் தனது தீவிர கவனத்தை செலுத்தி வரும் மம்தா மோகன்தாஸ், அரியவகை பாதிப்பு ஒன்றிற்கு உள்ளாகி இருக்கின்றார்.
இவரின் தோல் ஒரு இடத்தில் சாதாரண நிறத்தில், ஒரு சில இடங்களில் பிரவுன் நிறத்தில் என மாறி மாறி உள்ளது. விட்டிலிகோ என்கிற அரியவகை நோய் பாதிப்பே இதற்கு காரணம். கடந்த ஆண்டு தான் இவருக்கு இந்த பாதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் விட்டிலிகோ தினம் ஜூன் மாதத்தில் கடைபிடிபட்டு வருகின்றது. அப்படி இந்த ஆண்டை முன்னிட்டு, தனக்கு இருக்கும் பாதிப்பை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் மம்தா மோகன்தாஸ்.