தமிழகம் வரும் மம்தா பானர்ஜி .. காரணம் என்ன ?
By Irumporai
சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நவ.3ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிறந்தநாள் விழா
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக உள்ள இல.கணேசன் மகனின் பிறந்தநாள் விழா நவம்பர் 3ம் தேதி சென்னையில் உள்ள ஆளுநரின் வீட்டில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மம்தா பானர்ஜி சென்னை வருகை
இதேபோல் மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இல.கணேசன் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துளளதாக கூறப்படுகிறது.