குற்றவாளிகளை துாக்கில் போடணும் - கெடு விதித்த முதல்வர் மம்தா
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட மம்தா வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேற்குவங்கம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இதனை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார். அதன்பின் பேசிய அவர், கோல்கட்டா சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது.
மம்தா வலியுறுத்தல்
இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். நாளைக்குள் சி.பி.ஐ., விசாரணையை நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இடதுசாரி மற்றும் பாஜகவினர் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
மருத்துவ கல்லூரியை பாஜகவினர் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். பாஜகவினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள்.
அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் பாஜகவினருக்கு உள்ள தொடர்பை நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.