கொடூர குற்றம்: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் - ஐஎம்ஏ அறிவிப்பு!

Attempted Murder Sexual harassment West Bengal Crime
By Sumathi Aug 16, 2024 05:45 AM GMT
Report

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் கொலை

இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,

கொடூர குற்றம்: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் - ஐஎம்ஏ அறிவிப்பு! | Ima Announces Nationwide Doctors Strike

நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும்.

காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு - கதறும் பெற்றோர்!

காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு - கதறும் பெற்றோர்!

போராட்டம் அறிவிப்பு

அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.

கொடூர குற்றம்: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் - ஐஎம்ஏ அறிவிப்பு! | Ima Announces Nationwide Doctors Strike

நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.