இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

Kerala India Death
By Jiyath Mar 28, 2024 10:41 AM GMT
Report

இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவர் தற்கொலை  

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாடு பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி (30). இவர் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வந்தார்.

இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்! | Young Lady Doctor Dead In Thiruvananthapuram

அபிராமிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பிரதீஷ் ரகு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் மும்பையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பின்பு அபிராமி பி.டி.சாக்கோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார்.

வங்கி வேலையை விட்ட இளம்பெண் - அறை எடுத்து தங்கி செய்த காரியம்!

வங்கி வேலையை விட்ட இளம்பெண் - அறை எடுத்து தங்கி செய்த காரியம்!

போலீசார் விசாரணை    

இந்நிலையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அபிராமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்! | Young Lady Doctor Dead In Thiruvananthapuram

பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில், அபிராமி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், "எனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. வாழ விரும்பவில்லை. போகிறேன்" என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.