அரசு மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மருத்துவர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சப்கஞ்ச்நகர் மாவட்டம் பிட்கின் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு 45 வயது மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார்.
இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என அந்தப் பகுதி பொதுமக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்தில் நிர்வாணமாக சுற்றித்திரிந்துள்ளார்.
நடவடிக்கை
கழிவறைக்கு செல்லும்முன் அவர் ஆடையின்றி சுற்றித்திருந்துள்ளார்.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.