அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் - எல்லை மீறிய மருத்துவர்!

Karnataka Wedding India Crime
By Jiyath Feb 10, 2024 07:05 AM GMT
Report

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில், மருத்துவர் ஒருவர் திருமண போட்டோஷூட் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

போட்டோ ஷூட்

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவின் பரமசாகரில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் அபிஷேக் (30).

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் - எல்லை மீறிய மருத்துவர்! | Wedding Photo Shoot In Hospital Operation Theater

இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பணிபுரியும் அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரிலேயே போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

700 ரூபாய்க்கு Thar கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் - சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

700 ரூபாய்க்கு Thar கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் - சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

சஸ்பெண்ட் 

அதில், ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்து கொடுப்பது போலவும் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் - எல்லை மீறிய மருத்துவர்! | Wedding Photo Shoot In Hospital Operation Theater

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்தவர்கள், அபிஷேக் மருத்துவ தொழிலை கொச்சைப்படுத்தியதாகவும், அரசு மருத்துவமனையை தவறாக பயன்படுத்தியதாகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்று உத்தரவிட்டார்.