இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா?

India World
By Jiyath Mar 10, 2024 08:17 AM GMT
Report

செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார்.

உலக அழகி போட்டி

இந்தியாவில் கடந்த 1996-ம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் 71வது உலக அழகி போட்டி நடத்தப்பட்டது.

இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா? | Krystyna Pyszkova Won 71St Miss World

இந்த போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்பு - 26 வயதில் பிரபல ஆபாச பட நடிகை திடீர் மரணம்!

அடுத்தடுத்து நடக்கும் உயிரிழப்பு - 26 வயதில் பிரபல ஆபாச பட நடிகை திடீர் மரணம்!

கிறிஸ்டினா பிஸ்கோவா

இதில் இந்தியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர். இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார்.

இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா? | Krystyna Pyszkova Won 71St Miss World

லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார்.