அழகி பட்டத்தை வென்று வரலாறு படைத்த முதல் திருநங்கை - குவியும் பாராட்டுக்கள்!
அழகி போட்டியில் கலந்துகொண்ட திருநங்கை ஒருவர் வென்றது இணையத்தில் பரவி வருகிறது.
திருநங்கை
இந்த ஆண்டின் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை திருநங்கை ஒருவர் வென்றுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ரிக்கி வலேரி கோலே என்பவர் நெதர்லாந்தில் மாடலிங் துறையில் பிரபலமாக உள்ளார், 22 வயதான இவர் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிக்கி வலேரியின் இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
இணையத்தில் வைரல்
இந்நிலையில், மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு பேசிய இவர் மிஸ் வேர்ல்ட் போட்டியில் சேர ஆவலுடன் இருப்பதாக கூறினார். மேலும் இவர் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் "நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இதன் மூலம் எனது சமூகத்தை பெருமைப்படுத்தவும், அதை வெளியில் கொண்டு வரவும் முடியும்" என்று கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாக நிலையில், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan