நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - விருதுநகர்
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 34-வது தொகுதி விருதுநகர்.
விருதுநகர்
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பின் போது சிவகாசி மக்களவை தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விருதுநகர் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது.நீக்கப்பட்ட சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. விருதுநகர் மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன.
தற்போது விருதுநகர் மக்களவை தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
3 பொது தேர்தலை சந்தித்துள்ள விருதுநகர் மக்களவை தொகுதியில் 2 முறை காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெற்றியை பெற்றுள்ளார்.
2009 மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
2014 டி. இராதாகிருஷ்ணன் (அதிமுக)
2019 மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வேட்பாளராக விஜயபிரபாகரன் மற்றும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் டாக்டர் சி.கௌசிக் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி,
ஆண் வாக்காளர்கள் - 7,59,848 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,95,104 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 104 பேர் என மொத்தமாக 15,55,186 வாக்காளர்கள் உள்ளனர்..