நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தேனி

Tamil nadu Election Theni
By Karthick Mar 23, 2024 11:30 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 33-வது தொகுதி தேனி.

தேனி

கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சிவகங்கை

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சிவகங்கை

இதில், தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடிநாயக்கனூர் தேனி மாவட்டத்திலும், சேடப்பட்டி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிகளாகும். தொகுதி மறுசீரமைப்பின் போது, சேடபட்டித் உசிலம்பட்டித் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தஞ்சாவூர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தஞ்சாவூர்

தேனியின் ஒருபகுதி போடித் தொகுதியுடனும் மற்றொரு பகுதி கம்பம் தொகுதியுடனும் இணைக்கப்பட்டது.தற்போது தேனி மக்களவை தொகுதியில் சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் செல்வாக்கு வாய்ந்த ஒரு தொகுதியாக இது கருதப்படுகிறது.

2009 ஜே. எம். ஆரூண்ரஷீத் (காங்கிரஸ்)

2014 ஆர். பார்த்தீபன் (அதிமுக)

2019 இரவீந்திரநாத் குமார் (அதிமுக)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி,

ஆண் வாக்காளர்கள் - 5,44,339 பேர்

பெண் வாக்காளர்கள் - 5,67,967 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 193 பேர் என மொத்தமாக 11,12,499 வாக்காளர்கள் உள்ளனர்.