நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தஞ்சாவூர்

Tamil nadu Thanjavur Election
By Karthick Mar 20, 2024 09:05 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 30-வது தொகுதி தஞ்சாவூர்.

தஞ்சாவூர்

2008-ஆம் ஆண்டு தொகுதி மாறுசீரமைப்பிற்கு முன்பு, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாகப்பட்டினம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாகப்பட்டினம்

மறுசீரமைப்பின் போது, புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டன. அதே போல, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இருந்த மன்னார்குடியும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது.

முன்பு இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டன. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் தற்போது மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  

தேர்தல் வரலாறு

1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை சந்தித்து வரும் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் மற்றும் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது.  திமுகவின் எஸ். எஸ். பழனிமாணிக்கம் அதிகபட்சமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.

1952 இரா. வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1957 இரா. வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1962 வைரவத்தேவர் (காங்கிரஸ்)

1967 கோபாலர் (திமுக)

1971 எஸ்.டி.சோமசுந்தரம் (திமுக)

1977 எஸ்.டி.சோமசுந்தரம் (அதிமுக)

1979 எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

(இடைத்தேர்தல்)

1980 எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1984 எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1989 எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1991 கே. துளசியா வாண்டையார் (காங்கிரஸ்)

1996 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

1998 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

1999 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2004 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2009 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2014 கு. பரசுராமன் (அதிமுக)

2019 எஸ். எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 22/01/24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி,

ஆண் வாக்காளர்கள் - 9,87,478 பேர்

பெண் வாக்காளர்கள் - 10,47,827 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 166 பேர் என 20,29.471 மொத்தமாக வாக்காள