நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சிவகங்கை

Tamil nadu Election Sivagangai
By Karthick Mar 21, 2024 08:53 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 31-வது தொகுதி சிவகங்கை.

சிவகங்கை

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாகப்பட்டினம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாகப்பட்டினம்

இதில், திருமயம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. தற்போது சிவகங்கை மக்களவை தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் வரலாறு

1967 முதல் பொதுத்தேர்தலை சந்தித்து வரும் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறை வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அதிகபட்சமாக 7 முறை வெற்றி வாகை சூடியுள்ளார்.

1967 தா. கிருட்டிணன் (திமுக)

1971 தா. கிருட்டிணன் (திமுக)

1977 பெரியசாமி தியாகராஜன் (அதிமுக)

1980 ஆர். வி. சுவாமிநாதன் (காங்கிரஸ்)

1984 ப. சிதம்பரம் (காங்கிரஸ்)

1989 ப. சிதம்பரம் (காங்கிரஸ்)

1991 ப. சிதம்பரம் (காங்கிரஸ்)

1996 ப. சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1998 ப. சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1999 மா. சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்)

2004 ப. சிதம்பரம் (காங்கிரஸ்)

2009 ப. சிதம்பரம் (காங்கிரஸ்)

2014 பி. ஆர். செந்தில்நாதன் (அதிமுக)

2019 கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தஞ்சாவூர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தஞ்சாவூர்

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 22.01.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின் படி,

ஆண் வாக்காளர்கள் - 5,79,141 பேர்

பெண் வாக்காளர்கள் - 6,00,702 பேர்

மூன்றாம் பாலினத்தவர் - 54 பேர் என மொத்தமாக 11,79,8967 வாக்காளர்கள் உள்ளனர்.