நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - விழுப்புரம்.
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 13-வது தொகுதி விழுப்புரம்.
விழுப்புரம்
2008-ஆம் தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி விழுப்புரம்.
திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.
இந்த தொகுதியில், தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை.
தேர்தல் வரலாறு
2009 மு. ஆனந்தன் (அதிமுக)
2014 எஸ். ராஜேந்திரன் (அதிமுக)
2019 ரவிக்குமார் (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 05/01/2023 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு,
ஆண் வாக்காளர்கள் 8,34,394 பேர்
பெண் வாக்காளர்கள் 8,55,708 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 213 பேர் என மொத்தமாக 16,90,315 பேர் இருக்கின்றனர்.