நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - வேலூர்

Tamil nadu Election Vellore
By Karthick Feb 25, 2024 11:33 PM GMT
Report

தமிழ்நாட்டின் 8-வது நாடாளுமன்ற தொகுதி வேலூர்.

வேலூர்

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இந்த மக்களவை தொகுதியில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர் மற்றும் ஆரணி சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - அரக்கோணம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - அரக்கோணம்

தற்போது தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பிறகு, இந்த தொகுதியில், வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - காஞ்சிபுரம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - காஞ்சிபுரம்

கடந்த 2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில், ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த தொகுதிக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அந்நிலையில் திமுகவின் வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத தொகையை மீட்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வரலாறு

1951 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் (காமன்வீல் கட்சி & காங்கிரஸ்)

1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி (காங்கிரஸ்)

1962 அப்துல் வாகித் (காங்கிரஸ்)

1967 குசேலர் (திமுக)

1971 ஆர். பி. உலகநம்பி (திமுக)

1977 வி. தண்டாயுதபாணி (நிறுவன காங்கிரஸ்)

1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது (சுயேட்சை)

1984 ஏ.சி.சண்முகம் (அதிமுக)

1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது (காங்கிரஸ்)

1991 அக்பர் பாஷா (காங்கிரஸ்)

1996 பி. சண்முகம் (வேலூர்) (திமுக)

1998 என். டி. சண்முகம் (பாமக)

1999 என். டி. சண்முகம் (பாமக)

2004 கே. எம். காதர் மொகிதீன் (திமுக)

2009 எம். அப்துல் ரஹ்மான் (திமுக)

2014 பி. செங்குட்டுவன் (அதிமுக)

2019 கதிர் ஆனந்த் (திமுக)  

வாக்காளர் எண்ணிக்கை

17 ஆவது மக்களவைத் தேர்தல் கணக்கீட்டின் அடிப்படையில், வாக்காளர் எண்ணிக்கை வருமாறு,

ஆண் வாக்காளர்கள் - 6,90,154 பேர்

பெண் வாக்காளர்கள் - 7,17,581 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என மொத்தம் 14,07,817 வாக்காளர்கள் உள்ளனர்.