நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ராமநாதபுரம்

Tamil nadu Ramanathapuram Lok Sabha Election 2024
By Karthick Apr 02, 2024 08:56 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 35-வது தொகுதி ராமநாதபுரம்.

ராமநாதபுரம்

ராமநாதபுர மக்களவை தொகுதியில் 3 மாவட்டங்கள் அதாவது ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - விருதுநகர்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - விருதுநகர்

2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு ராமநாதபுர மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), கடலாடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியும், சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை, விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தேனி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தேனி

தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி , ராமநாதபுர மாவட்டத்தின் பரமக்குடி (தனி), திருவாடானை, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

1951 முதல் பொதுத்தேர்தலை சந்தித்து வரும் ராமநாதபுர மக்களவை தொகுதியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் வி. ராஜேஸ்வரன் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

1951 நாகப்பசெட்டியார் (காங்கிரஸ்)

1957 சுப்பையா அம்பலம் (காங்கிரஸ்)

1962 அருணாச்சலம் (காங்கிரஸ்)

1967 எஸ். எம். முகம்மது செரிப் (சுயேச்சை)

1971 பா. கா. மூக்கைய்யாத்தேவர் (பார்வார்டு பிளாக்கு)

1977 அன்பழகன் (அதிமுக)

1980 சத்தியேந்திரன் (திமுக)

1984 வி. ராஜேஸ்வரன் (காங்கிரஸ்)

1989 வி. ராஜேஸ்வரன் (காங்கிரஸ்)

1991 வி. ராஜேஸ்வரன் (காங்கிரஸ்)

1996 உடையப்பன் (தமிழ் மாநில காங்கிரஸ்)

1998 வி. சத்தியமூர்த்தி (அதிமுக)

1999 கே. மலைச்சாமி (அதிமுக)

2004 எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன் (திமுக)

2009 ஜே. கே. ரித்தீஷ் (திமுக)

2014 அன்வர் ராஜா (அதிமுக)

2019 நவாஸ் கனி (இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 22.01.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின் படி, ராமநாதபுர மாவட்டத்தில்

ஆண் வாக்காளர்கள் - 5,80,848 பேர்

பெண் வாக்காளர்கள் - 5,88,068 பேர்

மூன்றாம பாலினத்தவர் 68 பேர் என மொத்தமாக 11,68,984 வாக்காளர்கள் உள்ளனர்.