நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - மதுரை
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 32-வது தொகுதி மதுரை.
மதுரை
தமிழகத்தின் முக்கியமான மக்களவை தொகுதிகளில் ஒன்று மதுரை. 2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பிற்கு முன்பு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
இவற்றில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாக மாறியது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
தற்போது மதுரை மக்களவை தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி மற்றும் மதுரை மேற்கு போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
1957 முதல் மக்களவை தேர்தலை சந்தித்து வரும் மதுரை மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 8 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஏ.ஜி.எஸ்.ராம்பாபு இங்கு (காங்கிரஸ் - 2, தமிழ் மாநில காங்கிரஸ் - 1) என 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1957 கே. டி. கே. தங்கமணி (சிபிஐ)
1962 என்.எம்.ஆர்.சுப்புராமன் (காங்கிரஸ்)
1967 ப.ராமமூர்த்தி (சிபிஎம்)
1971 ஆர்.வி.சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1977 ஆர்.வி.சுவாமிநாதன் (காங்கிரஸ்)
1980 ஏ.ஜி.சுப்புராமன் (காங்கிரஸ்)
1984 ஏ.ஜி.சுப்புராமன் (காங்கிரஸ்)
1989 ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (காங்கிரஸ்)
1991 ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (காங்கிரஸ்)
1996 ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 சுப்பிரமணியன் சுவாமி (ஜனதா)
1999 பொ. மோகன் (சிபிஎம்)
2004 பொ. மோகன் (சிபிஎம்)
2009 மு.க.அழகிரி (திமுக)
2014 இரா.கோபாலகிருஷ்ணன் (அதிமுக)
2019 சு.வெங்கடேசன் (சிபிஎம்)
வாக்காளர்கள் எண்ணிக்கை
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின் படி,
ஆண் வாக்காளர்கள் - 13,2,834 பேர்
பெண் வாக்காளர்கள் - 13,46,733 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 226 பேர் என மொத்தமாக 26,49,793 வாக்காளர்கள் உள்ளனர்.