நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - கன்னியாகுமரி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 39-வது தொகுதி கன்னியாகுமரி
கன்னியாகுமரி
2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியானது.
நாகர்கோவில் மக்களவை தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.இவற்றில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
2009 ஜெ. ஹெலன் டேவிட்சன் (திமுக)
2014 பொன். இராதாகிருஷ்ணன் (பாஜக)
2019 எச். வசந்தகுமார் (காங்கிரஸ்)
இடைத்தேர்தல்
2019-ஆம் ஆண்டின் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் கடந்த 28 ஆகஸ்ட் 2020 அன்று காலமான நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது.
அப்போது மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எச்.வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகினார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.24 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தில்
ஆண் வாக்காளர்கள் - 7,72,623 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,74,619 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 136 பேர் என மொத்தமாக 15,47,378 வாக்காளர்கள் உள்ளனர்.