நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தூத்துக்குடி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 36-வது தொகுதி தூத்துக்குடி.
தூத்துக்குடி
2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும் தூத்துக்குடி.
இந்த மக்களவை தொகுதியில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம்(தனி) மற்றும் கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
இது வரை 3 தேர்தல்களை சந்தித்துள்ள தூத்துக்குடி மக்களவையில் 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி கருணாநிதி தற்போது தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
2009 எஸ். ஆர். ஜெயதுரை (திமுக)
2014 ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (அதிமுக)
2019 கனிமொழி (திமுக)
இம்முறையும் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜென் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில்,
ஆண் வாக்காளர்கள் - 7,08,234 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,39,710 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 215 பேர் என மொத்தமாக 14,48,159 வாக்காளர்கள் உள்ளனர்.