நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தென்காசி
தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 37-வது தொகுதி தென்காசி
தென்காசி
2008-ஆம் ஆண்டின் மறுசீரமைப்பிற்கு பிறகு தற்போது தென்காசி மக்களவை தொகுதியில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் (தனி), சங்கரன்கோவில்(தனி), கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் தென்காசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
3 தனி சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தென்காசி மக்களவை தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தேர்தல் வரலாறு
1957 முதல் பொதுத்தேர்தலை சந்தித்து வரும் தென்காசி மக்களவை தொகுதியில் இது வரை அதிகபட்சமாக காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. மூ. அருணாச்சலம் அதிகபட்சமாக 6 முறை(காங்கிரஸ் - 5 தமிழ் மாநில காங்கிரஸ் -1) வெற்றி பெற்றுள்ளார்.
1957 எம். சங்கரபாண்டியன் (காங்கிரஸ்)
1962 எம். பி. சாமி (காங்கிரஸ்)
1967 ஆர்.எஸ்.ஆறுமுகம் (காங்கிரஸ்)
1971 செல்லசாமி (காங்கிரஸ்)
1977 மூ. அருணாச்சலம் (காங்கிரஸ்)
1980 மூ. அருணாச்சலம் (காங்கிரஸ்)
1984 மூ. அருணாச்சலம் (காங்கிரஸ்)
1989 மூ. அருணாச்சலம் (காங்கிரஸ்)
1991 மூ. அருணாச்சலம் (காங்கிரஸ்)
1996 மூ. அருணாச்சலம் (தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 எஸ். முருகேசன் (அதிமுக)
1999 எஸ். முருகேசன் (அதிமுக)
2004 எம். அப்பாதுரை (சிபிஐ)
2009 பி.லிங்கம் (சிபிஐ)
2014 வசந்தி முருகேசன் (அதிமுக)
2019 தனுஷ் எம். குமார் (திமுக)
வாக்காளர்கள் எண்ணிக்கை
கடந்த 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி, தென்காசி மாவட்டத்தில்
ஆண் வாக்காளர்கள் - 6,46,907 பேர்
பெண் வாக்காளர்கள் - 6,74,616 பேர்
மூன்றாம் பாலினத்தவர் 156 பேர் என மொத்தமாக 13,21,676 வாக்காளர்கள் உள்ளனர்.